சில பொருட்களின் விலைகளை அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது?
பால் மா, சமையல் எரிவாயு, சீமெந்து மற்றும் கோழி இறைச்சி ஆகியனவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக வார இறுதி பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய சந்தை நிலைமைகளின் அடிப்படையில் குறித்த பொருட்களின் விலைகளை உயர்த்துவதற்கு அனுமதிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கோரப்பட்டுள்ளது.
இந்த பொருட்களை உற்பத்தி செய்யும் மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களே இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, உலக சந்தையில் பொருட்களுக்கான விலை உயர்வு, போதியளவு நிரம்பல் இன்மை, போக்குவரத்து செலவு அதிகரிப்பு, கொள்கலன் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்தப் பொருட்கள் அனைத்தும் அரசாங்கத்தின் விலைக்காட்டுப்பாட்டின் கீழ் இருப்பதனால் அரசாங்கத்தின் அனுமதியின்றி இவற்றுக்கான விலைகளை அதிகரிக்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 19 மணி நேரம் முன்
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri