பொலிஸ் மா அதிபர் பொது மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்
இலங்கையில் குற்றச்செயல்கள், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு பொலிஸாருக்கு தொடர்ந்து பொது மக்களின் ஆதரவு தேவைப்படுவதாகவும், பொலிஸாரை நம்பும் இலங்கை சமூகம் பாதுகாப்பாக இருக்கும் எனவும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
களனியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை
தந்தை ஒருவர் தனது பிள்ளையை மனிதாபிமானமற்ற முறையில் அடிக்கம் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் அண்மையில் பரவியிருந்தது. குறித்த நபரை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் பல்வேறு சமூக அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் ஆதரவுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பூரண ஒத்துழைப்போடு இலங்கை பொலிஸார் குற்றவாளியை கைது செய்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொலிஸார் மீது பொதுமக்களுக்கு விமர்சனங்கள் இருக்கலாம் என்றும், பெரும்பாலான பொலிஸ் அதிகாரிகள் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் தங்கள் கடமைகளைச் செய்வதால், அந்தத் தவறுகளை சரிசெய்ய பொலிஸார் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
