கிளிநொச்சி நீரியல்வளத்துறை பணிப்பாளருக்கு கடற்றொழிலாளர்கள் முன்வைக்கும் கோரிக்கை
யாழ்.மாவட்ட குருநகர், பாசையூர், கொழும்புத்துறை பகுதி கடற்றொழிலாளர்களின் சிறகுவலைத் தொழிலுக்கான வலைகளை கிளிநொச்சி மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் பிடுங்கி அகற்றியுள்ளார்.
இந்த விடயம் குறித்து பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இந்த தொழில் பாரம்பரியமாக 150 வருடங்களைத் தாண்டி மேற்கொண்டு வருகிறோம்.
இந்த விடயம் குறித்து நாங்கள் சென்று வினவியபோது அனுமதியைப் பெற்று மேற்கொள்ளுங்கள்
என திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கான அனுமதி பெறுவதற்கு பல மாதங்களாகும் அதுவரை எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும், எமது பிள்ளைகளின் கல்வி பாதிப்படையும் எனவே அதுவரை எமக்கு மன்னிப்பளித்து இந்த தொழிலை மேற்கொள்ள அனுமதிக்குமாறு கோரியுள்ளனர்.
இதற்காக ஒன்றுகூடிய கடற்றொழிலாளர்கள் யாழ். பாசையூர் கடற்றொழிலாளர்
கூட்டுறவுச் சங்கத்தில் ஊடக சந்திப்பையும் மேற்கொண்டனர்.

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
