வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
நடைபெறவுள்ள ஐ.நா கூட்டத் தொடரிலே தங்களுக்கான நீதிப் பொறிமுறை விடயங்களை வலியுறுத்துமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று(15) நடைபெற்றபோதே இந்த சங்கத்தின் தலைவி யோகராசா கலாறஞ்சினி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை.இந்த அரசும் அதற்கான நீதியை பெற்று தருவதற்கு இது இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை.
போராட்டம்
அம்பாறை- தம்பிலுவில் மத்திய சந்தை பகுதியில் இயங்கி வருகின்ற அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தை உடனடியாக அகற்றுமாறு அதன் தலைவிக்கு மக்களின் வாக்குகளை பெற்று தவிசாளராகிய சசிக்குமார் என்பவரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் காலை அம்பாறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா பிரதிநிதியிடம் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை சந்திப்பதோடு செம்மணிப்புதை குழி மற்றும் தொடுவாய் மன்னார் போன்ற புதைகுழிகளையும் பார்வையிட வேண்டும் என்ற அழுத்தத்தை அரசாங்கம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri