புலம்பெயர் இலங்கையர்களுக்கு இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ள அறிவுறுத்தல்
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களிடம் அன்பான வேண்டுகோளொன்றை இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ளது.
அதன்படி இலங்கையின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர் இலங்கையர்கள் வழங்கும் பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அத்துடன் வெளிநாட்டில் உழைக்கும் வருவாய்களை இலங்கையில் உள்ளவர்களுக்கு அனுப்புவதற்கு முறையான வழிகளைப் பயன்படுத்துமாறும், தொடர்ந்தும் எமது நாட்டிற்கு ஆதரவளிக்குமாறும் புலம்பெயர் இலங்கையர்களிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதற்கான அறிக்கையில் வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பணம் ஏன் முக்கியமானது, இலங்கையின் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் வகையில் பணத்தை எவ்வாறு அனுப்ப முடியும், வெளிநாட்டில் உழைக்கும் வருவாய்களை எவ்வாறு இலங்கைக்கு அனுப்பி முதலீடு செய்வது போன்ற விடயங்கள் தொடர்பில் விபரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஹவாலா மற்றும் உண்டியல் போன்ற முறைசாரா வழிகள் வங்கித்தொழில் வலையமைப்பிற்கு புறம்பாக செயற்படுத்தப்படுவதனால் அத்தகைய வழிகள் மூலம் அனுப்பப்படும் வெளிநாட்டு நாணயங்களை அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்கு பயன்படுத்த முடியாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்காக கிடைத்துள்ள பணம்
கணக்கு விபரங்களுடன் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு |
மேலும், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக நலன் விரும்பிகளிடமிருந்து சுமார் 50,000 அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அண்மைய புள்ளிவிவரங்களின்படி, 51,988 அமெரிக்க டொலர்கள், 14,508 ஸ்டெர்லிங் பவுண்ட்கள், 4253 யூரோக்கள் மற்றும் 11,646 அவுஸ்திரேலிய டொலர்களை நலன் விரும்பிகளிடமிருந்து பெற்றுள்ளது.
எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாடுகளில் உள்ள நலன் விரும்பிகளிடமிருந்து அந்நிய செலாவணியைப் பெறுவதற்காக அண்மையில் இலங்கை மத்திய வங்கி கணக்குகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 3 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
