பைடன் நிர்வாகம் பாகிஸ்தானிடம் விடுத்துள்ள கோரிக்கை!
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, ISIS என்ற இஸ்லாமிய அரசு, அல்கொய்தா போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக ஒத்துழைக்க அமெரிக்காவின் பைடன் நிர்வாகம் பாகிஸ்தானை வலியுறுத்துகிறது.
இந்த செய்தியை ANI செய்திச் சேவை வெளியிட்டுள்ளது.
நஹால் டூசி எழுதிய பொலிடிகோ பத்தியில், அமெரிக்காவுக்கு சாதகமாக பதில் வழங்கும் வகையில் இஸ்லாமிய அரசு - கொரசனுக்கு எதிராக போராடுவதற்கு பதிலாக, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியோடும் மக்களுக்கு உதவுவதில் பொது அங்கீகாரத்தை விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) , இதுவரை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் (Imran Khan) பேச்சு நடத்தவில்லை.
கடந்த மாதத்தில், ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் விரைவான வெற்றி பெற்று வந்த போது, அமெரிக்க இராஜாங்க செயலாளர் எண்டனி பிளிங்கன், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியிடம் ஒரு முறை மட்டுமே நேரடியாகப் பேச்சு நடத்தினார்.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் ஆப்கானிஸ்தானின் தலிபான்களை நீண்டகாலமாக வளர்த்து வந்தன, 1990 களில் ஆப்கானிஸ்தானில் அவர்களின் கடுமையான ஆட்சியை, பாக்கிஸ்தான் ஆதரித்தது.
அமெரிக்க படையெடுப்பைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் அதன் மண்ணில் தலிபான் தலைவர்கள் மற்றும் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது, இது இஸ்லாமிய தீவிரவாதிகளை தோற்கடிப்பதற்கான அமெரிக்க முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று பொலிட்டிக்கோவில் நஹால் டூசி கூறியுள்ளார்.
கடந்த மாதத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் விரைவாக ஆட்சிக்கு வருவதற்கு பாகிஸ்தானின் பயிற்சியும் தந்திரோபாய உதவியும் உதவியதாக சில ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
அத்துடன் ஆப்கானிஸ்தானின் தலிபான்களை, எதிர்காலத்தில் இந்தியாவிற்கு எதிரான எந்தப் போராட்டத்திலும் பங்குதாரராக பாகிஸ்தான் பார்க்கிறது என்றும் டூசி குறிப்பிட்டுள்ளார்.