தம்மிக்க பாணி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
தம்மிக்க பாணியை அறிமுகம் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர், சபாநாயகர் ஆகியோர் இந்தப் பாணியை அருந்திக் காண்பித்தனர் எனவும், சில அமைச்சர்கள் இந்த பாணி தயாரிப்பிற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பாணியை அருந்தியவர்கள் எதிர்வரும் காலங்களில் பக்க விளைவுகளை சந்தித்தால் அதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே கோவிட் தடுப்பு மருந்து என்ற அடிப்படையில் இந்த பாணியை அறிமுகம் செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஹெக்டர் ஹப்புஹாமி தெரிவித்துள்ளார்.