ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை
பிரதி சபாநாயகர் மற்றும் பிரதித் தலைவர் பதவிகளில் இருந்து விலக வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றிரவு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தபோதே ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
எனினும் இரண்டு பதவிகளையும் இராஜினாமா செய்ய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், குழுவின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதனும் செயற்பட்டனர்.
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயேட்சைக் குழுவாக செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்ததையடுத்து, இந்த இரண்டு பதவிகளையும் இராஜினாமா செய்ய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் ராஜினாமாவை ஏற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மறுப்பு தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
