உக்ரேனில் வாழும் இலங்கை மாணவன் விடுக்கும் உருக்கமான கோரிக்கை
ரஷ்யா - உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் பல உக்ரேனியர்கள் அச்சத்திலும் பாதுகாப்பின்மையிலும் வாழ்கின்றனர்.
இந்நிலையில் உக்ரைனில் வசிக்கும் இலங்கை இளைஞன் ஒருவர் தெரிவித்த கருத்து ஒன்றின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் பகிரப்பட்டு வருகின்றது.
தக்ஷித் விஜேசேகர என்ற இலங்கை இளைஞனே இவ்வாறு குறித்த காணொளியை வெளியிட்டுள்ளார்.
பல்கலைக்கழக விடுதியில் நான் இருக்கின்றேன். நான் பாதுகாப்பாக இருக்கின்றேன். எனது நண்பர் ஒருவர் சுரங்க ரயிலில் உள்ளார். எங்கள் பாதுகாப்பு குறித்து தூதரகத்திடம் பேசியுள்ளேன்.
துருக்கி தூதரகம் எங்களை குறித்து ஆராய்ந்து பார்த்து வருகின்றது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். வெளியே நகரங்களுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் என்னையும் தனது நண்பர்களை லிவிவ் நகருக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து போலந்து எல்லை வழியாக இலங்கைக்குத் திரும்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார்.
புகையிரத, வாகன சேவைகள் போன்ற போக்குவரத்து சேவைகள் எதுவும் தற்போது இயங்கவில்லை . தன்னையும் தனது தரப்பினரையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அந்த காணொளி ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 1 மணி நேரம் முன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
