வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வயோதிபர் தொடர்பில் தகவல் கோரல்
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வயோதிபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு உளநல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி கோரியுள்ளார்.
வவுனியா பொது வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்ட குறித்த வயோதிபர் சிங்கள மொழி பேசுபவர் என்பதுடன் தன்னை குணபால மென்டிஸ் என அறிமுகப்படுத்தியுள்ளார்.
எனினும் இவர் தொடர்பில் எவ்வித மேலதிக தகவலும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்தவர்கள்
தற்போது வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல சிகிச்சைகள் பிரிவின் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த வயோதிபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல பிரிவுடனோ அல்லது வவுனியா பொது வைத்தியசாலையின் உளநல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி சி.சுதாகரன் தொலைபேசி இலக்கம் 0714323585, உளநல பிரிவு 0242227784, 12 ஆவது விடுதி இலக்கம் 0242222762, 0242222262 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
