வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!
அரசாங்கம் மீண்டும் வாகன இறக்குமதியை ஆரம்பிக்கும் போது இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உதவியை நாடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்காக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
இந்த விடயம் தொடர்பில் சங்கத்தின் பொருளாளர் பிரசாத் மானேகே கருத்து தெரிவிக்கையில்,
"இதை என்றாவது ஒரு நாள் திறக்க வேண்டும். பிறகு இதை ஒரு அமைப்பிற்குத் திறக்க வேண்டும். அதற்கு எங்களுடன் சேருங்கள், ஏனென்றால் எங்கள் சங்கம் மூன்று அல்லது நான்கு தசாப்தங்களாக இந்த தொழிலில் உள்ளது." என்றார்.
இதேவேளை, உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் தொற்று காரணமாக, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி வாகன இறக்குமதிக்கு தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வாகன இறக்குமதியானது, அடுத்த வருடம் இறுதி வரை தொடரும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 16 மணி நேரம் முன்

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri
