"ஜனாதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத இராணுவத்தளபதிக்கு புதிய நெருக்கடி"
நாடு முழுவதும் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களில் இராணுவத்தளபதி தலையிடத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று கோட்டையிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன கருத்து தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக இடம்பெற்ற அனைத்து வன்முறை சம்பவங்களின் போது ஜனாதிபதியுடன் தான் இருந்ததாகவும், ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கும், இராணுவத் தளபதிக்கும் உத்தரவு பிறப்பித்ததை தான்அவதானித்ததாகவும், ஆனால் அந்த உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக செயற்படாத இராணுவத் தளபதி தனது பதவியை இராஜினாமா செய்யுமாறும் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
May you like this Video

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
