சர்வதேச விசாரணையே எமக்கு தேவை.. தாயக தாய்மார்கள் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
கோரும் தமிழ் தாய்மார்களின் அனைத்துலக மாநாட்டில் சர்வதேச இராஜதந்திரிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், காணாமல் போனோர் விவகாரம் தொடர்பான புத்தகங்களும் வெளியீடு செய்யப்படவுள்ளது.
அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் ஓகஸ்ட் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் "நீதிக்கான நீள்பயணம்" எனும் தலைப்பில் அன்றையதினம் குறித்த மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
சர்வதேச விசாரணையே தேவை..
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாநாடு தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் நேற்று(18.08.2026) நடைபெற்றது.

இதன்போதே குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை அரசிடம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தைக் கையாள்வதற்கோ, நீதியைப் பெற்றுத்தருவதற்கோ எவ்வித நம்பிக்கை மிகு பொறிமுறைகள் இல்லை, சர்வதேச விசாரணையே எமக்குத் தேவை என்பதை மாநாட்டில் வலியுறுத்தவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள் ஊடக சந்திப்பில் வலியுறுத்தியுள்ளனர்.