மர்மமாக உயிரிழந்த கபில சந்திரசேனவின் கைப்பேசி தரவுகள்! சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் பிரபல நிறுவனத்திடம் அவசர கோரிக்கை
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது கைப்பேசியிலிருந்து தரவுகளைப் பெறுவதற்காக சர்வதேச பொலிஸாரிடம் உதவிகோரப்பட்டுள்ளது.
சர்வதேச பொலிஸார் (இன்டர்போல்) வழியாக பிரபல கைப்பேசி நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு இன்று (26) கோட்டை நீதிவான் பசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது.
கபில சந்திரசேனவின் மரண விசாரணை
கபில சந்திரசேனவின் மரணம் குறித்த விசாரணையில்,17, 18, 19 மற்றும் 20 ஆகியோரின் சாட்சியம் இன்று (26) அழைக்கப்படவிருந்த நிலையில், 17 ஆவது மற்றும் 18 ஆவது சந்தேகநபர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான 19 ஆவது மற்றும் 20 ஆவது சாட்சிகள் இன்று (26) நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக, அவ்விரு சாட்சிகளுக்கும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அவர்கள் முன்னிலையாகாதது குறித்த தகவல்கள் விசாரிக்கப்பட்டு, சாட்சிகளுக்கு மீண்டும் தகவல் தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக சாட்சிய விசாரணைகள் எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இலங்கையில் அனைத்து துறையினரும் மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை - அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்