குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் : முன்னிலை பெற்றார் டொனால்ட் டிரம்ப் - செய்திகளின் தொகுப்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது.இதில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் காகஸ் என்ற மாகாண அளவிலான உள்கட்சி தேர்தல் அயோவா மாகாணத்தில் இருந்து தொடங்கப்பட்டது.
அந்த மாகாணத்தில் குடியரசு கட்சியின் பிரதிநிதிகள் வாக்களித்துள்ளனர். இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
இந்நிலையில் 9 மாவட்டங்களின் ஆரம்ப கட்ட முடிவுகளில் டிரம்ப் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன்மூலம் அயோவா மாகாணத்தில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதால் வேட்பாளர் தேர்வில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |