உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி எதிர்க்கட்சி தலைவருடன் சந்திப்பு
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலகா சிங், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை இன்று கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு முன்னெப்போதையும் விட வலுவான ஆதரவை வழங்குமாறு இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பொருள்களின் தட்டுப்பாடு தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் இந்நிலைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியால் செயற்படுத்தப்பட்டுவரும் 'எதிர்க்கட்சியின் மூச்சு' வேலைத்திட்டம் மூலம் 50 க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரால் இதன்போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்தச் செயற்பாட்டினை உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam