இந்திய வெளியுறவு அமைச்சரின் நகர்வுகளை இலங்கை நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதாக தெரிவிப்பு
இலங்கைக்கு இன்று (19.01.2023) இரண்டு நாள் பயணத்தை மேற்கொள்ளும் இந்திய வெளியுறவு அமைச்சரின் நகர்வுகளை இலங்கை நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் இலங்கையின் பல்வேறு தரப்புக்களும் இந்த பயணத்தை நன்மைத்தரும் பயணமாக நோக்குகின்றன.
இலங்கை நாடு, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிரிட்ஜ் கடனை தருவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
எனினும், இதற்காக சீனா, இந்தியா உட்பட்ட கடன்கொடுனர்களின் கடன் மீள்செலுத்தல்களை மறுசீரமைக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.
இந்தநிலையில், இலங்கையின் கடனை மறுசீரமைக்க இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே அறிவித்துள்ளார்.
அதேநேரம், கடன் மறுசீரமைப்புக்கு உதவும் தமது விருப்பத்தை இந்தியா, நேரடியாகவே கடிதம் மூலம் சர்வதேச நாணய நிதியத்துக்கு அறிவித்துள்ளது.
அத்துடன் இலங்கை நெருங்கிய நண்பன் மற்றும் அண்டை நாடு, இந்தியா எல்லா
நேரங்களிலும் இலங்கை மக்களுடன் நிற்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம்
அறிவித்துள்ளது.