சுகாதார அமைச்சருக்கு எதிராக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் (Photos)
சுகாதார அமைச்சரை மாற்றுமாறு கோரி வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கையெழுத்துப் போராட்டமானது, ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட கிளையினால் வவுனியா செட்டிக்குளத்தில் நேற்றையதினம் (01.09.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கு உடனடியாக தீர்வு வேண்டும் எனக் கோரி பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் முகமாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நன்மை செய்யக்கூடிய ஒருவர்
'மருந்து தட்டுப்பாட்டை நீக்குவதுடன், தற்போதைய சுகாதார அமைச்சரை மாற்றி மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய ஒருவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும்' என குறித்த போராட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னிமாவட்ட முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |







சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan