விரைவில் சீரமைக்கப்படவுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் சேதமடைந்த சொத்துக்கள்
நீர்கொழும்பு சிறைச்சாலையின் சொத்துக்களை, இலங்கை விமானப்படையின் ஆதரவுடன் சிறைச்சாலைகள் திணைக்களம் சீரமைக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதிகளிடையே ஏற்பட்ட கலவரத்தின் போது சேதமடைந்த சொத்துக்களே இவ்வாறு சீரமைக்கப்படவுள்ளன.
சிறைச்சாலையின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புனரமைப்புப் பணிகள்
இதற்கிடையில், வர்த்தமானி அறிவிப்பின் மூலம் மீண்டும் அதிகாரபூர்வமாக சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் போகம்பரா சிறைச்சாலையில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

அடுத்த வார தொடக்கத்திலேயே கைதிகளை இவ்விடத்திற்கு மாற்றும் பணியைத் திணைக்களம் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக தெரியவருகிறது.