யாழில் சீ நோர் படகு திருத்துமிட புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
யாழில் சீ நோர் படகு திருத்துமிடத்திற்கான புனரமைப்புப் பணிகள் ஆரம்மிக்கப்பட்டுள்ளன.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சிரமங்களை எதிர்நோக்கிய கடற்றொழிலாளர்கள்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கோலித்த கமல் ஜினதாச, தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் அதிகாரிகள், சீ நோர் நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

சீ நோர் படகு திருத்துமிடம் நெடுநாளாக இயங்காத நிலையில் இருந்துள்ளது.
இதனால் படகு திருத்த பணிகளை மேற்கொள்வதில் கடற்றொழிலாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இது தொடர்பில் அமைச்சர் சந்திரசேகரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இலங்கை மற்றும் இந்திய அரசின் 330 மில்லியன் நிதி உதவியின் கீழ் புனரமைப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 5 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri