அநுர செய்த அதிரடி மாற்றம்! நாமல் கூறிய விடயம்
புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் நேற்றையதினம்(08) பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், பேருந்து நிறுத்தக் கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு, ஒரு புதிய தகவல் மையம் நிறுவப்பட்டு, சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டு, சுற்றியுள்ள பகுதியும் அழகுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த புனரமைப்புப் பணிகள் சுமார் 424 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விமானப்படையினரின் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன், பல நிறுவனங்களின் பங்களிப்போடு இப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
பயணிகளின் வசதிக்காக பேருந்துகள் புறப்படும் நேரம் மற்றும் சென்றடையும் நேரம் ஆகிய தகவல்கள் அகன்ற டிஜிட்டல் திரைகளில் காட்சிப்படுத்தப்படும்.
இப்பணிகள் 15 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பேருந்து நிலையத்திற்கு வர்ணம் மட்டுமே பூசப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது லங்காசிறியின் Newsinsight நிகழ்ச்சி..
இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்! உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் இறுதி முடிவு அமெரிக்காவின் கைகளில்..