அகற்றப்பட்டது கந்தரோடை விகாரை என்ற பெயர்ப் பலகை!
வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அமைவாக கந்தரோடை விகாரை என்று பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகை இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளது.
கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம் என்பதை மட்டுமே அடையாளப்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்று சபையில் குறிப்பிடப்பட்ட நிலையில் குறித்த பெயர்ப் பலகை அகற்றப்பட்டுள்ளது.
அகற்றப்பட்ட பெயர்ப் பலகை இருந்த இடத்தில் ஒல்லாந்தர் காலத்திலே அமைக்கப்பட்ட சந்தைக் கட்டடத் தொகுதியின் சிறப்பம்சங்கள் பற்றிய கல்வெட்டுப் பெயர்ப் பலகை மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டது.
ஒல்லாந்தர் ஆக்கிரமிப்பு
அதாவது , ஒல்லாந்தர் ஆக்கிரமிப்பு ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் சமய நடவடிக்கைகளைக் கடந்து நிர்வாக, பொருளாதார நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை வழங்கியதன் தொல்லியல்ச் சான்றாகவே சுன்னாகம் சந்தைக் கட்டடத் தொகுதி அமைந்துள்ளது.

இந்த வரலாற்றை எமது எதிர்கால சந்ததிகளுக்கு ஊடுகடத்தும் விதமாக குறித்த பெயர்ப்பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri