கிளிநொச்சியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மதில் அகற்றி வெள்ளநீர் வெளியேற்றம்
கிளிநொச்சி- ஸ்கந்தபுரம் பிரதான வீதியை குறுக்கறுத்து செல்லும் கழிவு வாய்க்காலை மூடி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மதில் அகற்றப்பட்டு நீண்ட நாட்களாக தேங்கியிருந்த வெள்ள நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பிரதான வீதியை குறுக்கறுத்து செல்லும் வீதியில் காணப்பட்ட கழிவு வாய்க்காலுக்கு குறுக்காக அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் தனிநபர் ஒருவரால் மதில் அமைக்கப்பட்டிருந்தது.
மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம்
இதனால் அண்மையில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஸ்கந்தபுரம் பிரதான வீதியில் நீண்ட தூரத்துக்கு வெள்ள நீர் தேங்கி காணப்பட்டதுடன், வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளது.

அத்துடன் ஸ்கந்தபுரம் மேற்கு ஸ்கந்தபுரம் கிழக்கு மணியங்குளம் ஐயனார் குடியிருப்பு விநாயகர் குடியிருப்பு உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டதுடன், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இவ்வாறு ஏற்பட்ட அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு மாவட்ட அரசாங்க அதிபர், அனர்த்த முகாமைத்துவ பிரிவினுடைய பிரதிப் பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலாளர், கரைச்சிபிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்டு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மதிலின் ஒரு பகுதியை அகற்றி வெள்ள நீரை வெளியேற்றியுள்ளனர்.
இதனால் குறித்த விதியில் நீண்ட நாட்களாக தேங்கி இருந்த வெள்ள நீர் வடிந்துள்ளதுடன் மக்களின் போக்குவரத்து இயல்புக்கு திரும்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் திறக்கப்படும் வான்கதவுகள்.. மட்டக்களப்பு உட்பட பல பகுதிகளில் நிரம்பிவழியும் நீர்த்தேக்கங்கள்











என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam
புதிய வெப் தொடரை இயக்கும் மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்... யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri