இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர்களை அனுப்புவது மூன்று மடங்காக குறைந்துள்ளது
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் அங்கிருந்து இருந்து இலங்கைக்கு டொலர்களை அனுப்புவது சுமார் மூன்று மடங்காக குறைந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் ஆயிரத்து 255 மில்லியன் டொலர்களை வெளிநாடுகளில் தொழில் புரிவோர் இலங்கைக்கு அனுப்பி இருந்தனர்.
எனினும் இந்த ஆண்டு அந்த தொகையானது 464.1 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது. கடந்த காலங்களில் அந்நிய செலாவணி சந்தையை செயற்கையாக கட்டுப்படுத்தி வைத்திருந்ததன் காரணமாக இலங்கைக்கு டொலர்கள் வருவது வீழ்ச்சியடைந்தது.
இதன் காரணமாக இலங்கைக்கு 5 ஆயிரத்து 500 மில்லியன் டொலர் கிடைக்காமல் போயுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர்களை அனுப்பாமை மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தமை என்பன இதற்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
வரவேற்கிறோம்... பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் திட்டத்துக்கு மேக்ரான் வரவேற்பு News Lankasri
சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்த குழந்தையா இவர்... ஆளே மாறிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோஸ் Cineulagam