அமெரிக்க தாக்குதலில் 165 சிறுமிகள் பலியான கோர சம்பவம்! இந்த 2 பேரையும் நினைவில் கொள்ளுங்கள் - குற்றவாளிகளை அறிவித்த ஈரான்
தெற்கு ஈரானின் மினாப் நகரிலுள்ள ஷஜரே தையேபா என்ற சிறுமிகள் ஆரம்பப் பள்ளி மீதான தாக்குதலுக்கு முக்கிய காரணமானவர்கள் என, அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த இரண்டு உயர் அதிகாரிகளின் புகைப்படங்களை ஈரான் வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய குடியரசின் உச்சத்தலைவர் கமெனி கொல்லப்பட்ட அதேநாளில் அமெரிக்கா, தெற்கு ஈரானின் மினாப் நகரிலுள்ள ஷஜரே தையேபா என்ற சிறுமிகள் ஆரம்பப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியது.
தாக்குதலுக்கு முக்கிய காரணமானவர்கள்
இதில் சிறுமிகள், ஆசிரியர்கள் உட்பட 165க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு உலகின் பல்வேறு அமைப்புகளும் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் கண்டனம் தெரிவித்தன.
Remember these two criminals. Leigh R. Tate, the commander, and Jeffrey E. York, the executive officer of the USS Spruance, who ordered the launch of Tomahawk missiles three times, killing 168 innocent children at a school in #Minab. pic.twitter.com/CEsHFllJr2
— Iran in India (@Iran_in_India) March 29, 2026
அமெரிக்காதான் இதற்கு காரணம் என கண்டறியப்பட்டது.
X ஆரம்பத்தில் இத்தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று அமெரிக்கா மறுத்தாலும், பின்னர் பழைய அல்லது தவறான வரைபடத் தரவுகள் காரணமாக, அருகிலிருந்த ராணுவத் தளத்திற்குப் பதிலாகத் தவறுதலாகப் பள்ளி தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில் இந்தத் தாக்குதலுக்கு முக்கிய காரணமானவர்கள் என, அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த இரண்டு உயர் அதிகாரிகளின் புகைப்படங்களை ஈரான் வெளியிட்டுள்ளது.
ஈரான் குற்றம் சாட்டு
லெய் ஆர். டேட் (Leigh R Tate) மற்றும் ஜெப்ரி இ. யார்க் (Jeffrey E York) ஆகிய இரண்டு அமெரிக்க அதிகாரிகளின் புகைப்படங்களை இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியாவில் உள்ள ஈரானிய தூதரகங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளன.

இவர்கள் இருவரும் USS ஸ்ப்ருவான்ஸ் என்ற கப்பலில் இருந்து 'டோமாஹாக்' ஏவுகணைகளை ஏவுவதற்கு மூன்று முறை உத்தரவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
"இந்த இரண்டு குற்றவாளிகளையும் நினைவில் கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டு அவர்களின் புகைப்படங்களை ஈரான் தூதரகம் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ Cineulagam