திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு ஏடு திருடியவருக்கு விளக்கமறியல்
திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு ஏட்டினை திருடிய சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம். எஸ். எம். சம்சுதீன் முன்னிலையில் இவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருடியவருக்கு விளக்கமறியல்
கைது செய்யப்பட்டவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 45 வயது உடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

நிலம் தொடர்பிலான வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த வழக்கு தொடர்பில் மாவட்ட நீதிபதி கருப்பையா ஜீவராணி குறித்த வழக்கு ஏட்டினை மாவட்ட நீதிமன்ற பதிவாளரின் கண்காணிப்பில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதேவேளை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த நபர் பதிவாளர் உடன் காணப்பட்ட முரண்பாடு காரணமாக பதிவாளரை பழிவாங்கும் நோக்கில் குறித்த வழக்கு பதிவு ஏட்டினை திருடியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த சந்தேக நபருக்கு உதவியாக இருந்த தட்டழுத்தாளரான 30 வயதுடைய பெண்ணை 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லவும் அவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.