பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்
கொழும்பு - புதுக்கடை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் கசுன் தயாரத்ன உத்தரவிட்டுள்ளார்.
மருதானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போது நபர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியைப் பலாத்காரமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 26 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இவர் புதுக்கடை பிரதேசத்தில் 11 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வாழைத்தோட்டம் பொலிஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

இவர் நேற்றையதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri