காத்தான்குடி பகுதியில் புதையல் தோண்டியவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள மண்முணை பிரதான வீதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகே புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த மார்ச் 31ஆம் திகதி இரவு, மண்முணை பிரதான வீதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகே புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த மொரட்டுவ, கடுகஸ்தோட்டை, இங்கிராக்கொட உள்ளிட்ட பகுதிகளுக்குட்பட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 ஆம் திகதி வரை விளக்கமறியல்
அவர்களிடமிருந்து பூஜை பொருட்கள் மீட்கப்பட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களை எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் கடந்த முதலாம் திகதி அவர்கள் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
இதுகுறித்து மேலதிக விசாரணைகள் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.