சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் மத போதனைகள்: அரசாங்கத்தின் நடவடிக்கை - செய்திகளின் தொகுப்பு
திரிபுப்படுத்தும் மற்றும் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் மத போதனைகள் மற்றும் அது சார்ந்த செயல்களை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, புதிய சட்டங்களை இயற்றுவதற்கும் சட்டங்களை கடுமையாக்குவதற்குமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சில நாட்களுக்கு முன், மத உண்மைகளை திரித்து மத போதகர் ஒருவர் செய்த பிரசங்கங்களை தொடர்ந்து குறித்த மத போதகரும் அவரைப் பின்பற்றியவர்களும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து, சமூகத்தை சீர்குலைக்கும் நபர்களின் மத நம்பிக்கைகள் குறித்து ஆராய அமைச்சரவை குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



