நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்-செய்திகளின் தொகுப்பு
இலங்கை மத்திய வங்கியின் சபை கடந்த காலங்களில் எடுத்த சில தீர்மானங்கள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் சில சாதகமான பெறுபேறுகளை காணக்கூடியதாக உள்ளது என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,“எதிர்காலத்தில் பணவீக்கம் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது நாட்டின் பணவீக்கம் 60% சதவீதத்தை விட அதிகமாக உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எனினும் அந்நிய செலாவணி பற்றாக்குறை ஓரளவு குறைந்துள்ளது.”என கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,