தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் நாடகமாடியுள்ள அரசாங்கம்! அருட்தந்தை குற்றச்சாட்டு
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் நாடகமாடியுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
,தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாயின் அரசியல் தீர்மானத்தின் ஊடாக அது மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், மாறாக கொலைக்குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டுமென்பதற்காக, தண்டனை நிறைவடைந்து விடுதலையாகவுள்ள கைதிகளை விடுவித்துவிட்டு, அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் கைதிகள் விடுதலை குறித்து எமது ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.