மட்டு. அரசடி கிராம சேவகர் பிரிவில் ஆறு வீதிகள் விடுவிப்பு - இரு வீதிகள் தொடர்ந்தும் முடக்கம்
தனிமைப்படுத்தப்பட்ட மட்டக்களப்பு அரசடி கிராம சேவகர் பிரிவில் 5 வீதிகள் திங்கட்கிழமை(25) மாலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்துள்ளார்.
குறித்த கிராம சேவகர் பிரிவில் இரு வீதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி அரசடி கிராம சேவகர் பிரிவில் மூர் வீதியில் 79 வயது முதியவரும் அதனையடுத்து சில தினங்களில் அவரது மனைவியும் கொரோனா தொற்றினால் மரணமானதினால் அரசடி கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டது.
அரசடி கிராம சேவகர் பிரிவு முழுவதும் அன்டிஜன் மற்றும் பீ .சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது குறித்த ஆறு வீதிகளிலும் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படாமையினால் இவ்வீதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட மூர் வீதி மற்றும் பிள்ளையார் கோயில் வீதி என்பன தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.
பழைய வாடி வீட்டு வீதி, பன்சல வீதி, கொலட் லேன், சுப்பையா வீதி, லேடி மெனிங்ட்றைவ், பயனியர் வீதி, ஆகிய ஆறு வீதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.







ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri