கிளிநொச்சி - பாவிப்பாஞ்சான் பகுதியில் தனியார் காணி விடுவிப்பு
கிளிநொச்சி - பாவிப்பாஞ்சான் பகுதியில் 2010ம் ஆண்டு முதல் படையினர் வசம் இருந்த தனியார் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கரேந்ர ரணசிங்கவிடம் காணி உரிமையாளரால் கோரிக்கை விடுக்கப்பட்டதற்கு அமைவாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்பின் பெயரில் இன்றையதினம் விடுக்கப்பட்டுள்ளது.
57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜி.ஆர்.ஆர்.பி ஜெயவர்த்தனவினால் குறித்த காணி கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன்,
குறித்த காணி உரிமையாளரின் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் காணியை உரிமையாளரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களின் காணிகளைப் படையினர் படிப்படியாகக் கையளிப்பது வரவேற்கத்தக்கது. படையினர் வசம் உள்ள மேலும் சில காணிகளையும் விடுவிக்கப் படையினர் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.




