வடக்கு- கிழக்கில் வனவளத் திணைக்களம் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை வரவேற்ற வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நன்றி தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாடுகள் காரணமாகக் காணப்படும் பிரச்சினைகள், அபிவிருத்திப் பணிகளில் நிலவும் தடைகள் மற்றும் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
காணிப் பிரச்சினை
கலந்துரையாடலில் ஆரம்ப உரையாற்றிய ஆளுநர், 2012ஆம் ஆண்டு வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட காணிகளில் மக்களின் வாழ்விடங்களும் வாழ்வாதாரக் காணிகளும் உள்ளடங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

இதனை மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட பாரபட்சமாகக் கருதுவதாகவும் தெரிவித்தார். 1984ஆம் ஆண்டளவில் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், இன்றுவரை தமது காணிகளுக்குத் திரும்ப முடியாத நிலைமை தொடர்வதாகவும், இக்காணிப் பிரச்சினைகளால் அபிவிருத்தி மற்றும் புனரமைப்புப் பணிகளைக்கூட முன்னெடுப்பதில் பெரும் தடைகள் காணப்படுவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
எனவே, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவுக்கு மாவட்டச் செயலகங்கள் பரிந்துரைத்த காணிகளையாவது விரைவாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam