அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தில் குழப்பம்

Missing Persons Ampara SL Protest
By Farook Sihan Jun 17, 2025 09:38 AM GMT
Report

அம்பாறை- திருக்கோவில் தம்பிலுவில் மத்திய சந்தை முன்பாக நேற்று (16) நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் போது, திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளரால் சந்தை பகுதியில் போராட்டம் நடத்த தடை என்ற விடயத்தினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு தவிசாளரது பெயரை கூறி வருகை தந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டியதுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

குழந்தையின் சடலத்துடன் வீதிக்கு இறங்கிய மக்கள்

குழந்தையின் சடலத்துடன் வீதிக்கு இறங்கிய மக்கள்

போராட்டம் நடத்துவதற்கு தடை

தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு வடகிழக்கில் எங்கும் செல்வேன். என்னை எவராலும் தடுக்க முடியாது என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிரிஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்து இருக்கின்றார்.

நேற்றைய போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தில் குழப்பம் | Relatives Of Those Who Were Forcibly Disappeared

அவர் மேலும் தெரிவிக்கையில் ,இன்று காணாமல் ஆக்கப்பட்டோரால் நடத்தப்பட்ட போராட்டத்தில் மாத்திரமல்ல. தமிழன் என்ற அடிப்படையில் வடகிழக்கு பூராகவும் எங்களது இனத்துக்காகவும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீதி வேண்டியும் தற்போதைய இளம் சந்ததிகள் மற்றும் சமூகங்கள் எதிர்காலத்தில் கடத்தப்படக்கூடாது என்பதற்காகவும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றேன்.

இருந்தபோதிலும் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் ஒரு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டு போராட்டம் நடத்துவதற்கு தடை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அவ்வாறான செயற்பாடுகளை மனிதனுடைய அடிப்படை உரிமை மீறல் ஆகும்.இவ்வாறான விடயங்களை தவிசாளர் என்பவர் செய்யக் கூடாது. அவ்வாறான அதிகாரம் தவிசாளருக்கு இல்லை என்பதை இவ்விடத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

அதாவது நானும் முன்னாள் தவிசாளர் என்று முறையில் எனக்கு தெரிந்த விடயத்தில் இவ்விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன். ஏனெனில் எமது வடகிழக்கு தமிழர்களின் பாதுகாப்புக்காக இவ்வாறான போராட்டங்கள் நடந்து வருகின்றது. அதன் அடிப்படையில் இன்று போராட்டம் நடைபெற்ற போது சிலர் மதுபோதையில் தவிசாளரின் இணைப்பாளர் என கூறிக்கொண்டும் நீங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட முடியாது. காரைதீவில் இருந்து நீங்கள் இவ்விடத்திற்கு வர முடியாது என்று கூறினார்.

நான் தமிழன் என்ற ரீதியில் எங்கு சென்றும் குரல் கொடுப்பேன்.முடிந்தால் நான் இன்று மது போதையில் எங்களை எதிர்த்தவர்களுக்கு பொலிஸில் முறைப்பாடு செய்ய முடியும். கடந்த ஆட்சி காலத்தில் ஒட்டுக் குழுக்களின் பின்னணியிலிருந்து இந்த இடத்தில் பல தடவை நான் அச்சுறுத்தப்பட்டேன். ஒரு தடவை கடத்தப்படவும் இருந்தேன் .பாதுகாப்பான முறையில் அந்த சந்தர்ப்பத்தில் இந்த திருக்கோவில் மக்கள் எனது வீட்டுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று விட்டார்கள். அவ்வாறான சம்பவங்கள் கடந்த காலத்தில் இடம் பெற்றிருக்கின்றது.

முல்லைத்தீவில் இரு கடைகள் தீயில் எரிந்து நாசம் : விஷேட சோதனை நடவடிக்கையில் தடயவியல் பொலிஸார்

முல்லைத்தீவில் இரு கடைகள் தீயில் எரிந்து நாசம் : விஷேட சோதனை நடவடிக்கையில் தடயவியல் பொலிஸார்

கோாரிக்கை

இனிய பாரதி என்பவர் ஆயுத குழுக்களுடன் இயங்குகின்ற போது கூட நான் இந்த மக்களுக்கு உயிரை துச்சமாக மதித்து போராடியவர். ஆனால் இன்று என்னை மது போதையில் வந்து தாக்க முற்பட்டு காரைதீவு பகுதியில் இருந்து திருக்கோவில் பகுதிக்கு எவ்வாறு வருவீர்கள் என்றும் உங்களுக்கு இடுப்பில் பலம் இருக்கின்றதா என்று என்னிடம் கேட்கின்றார்கள்.

அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தில் குழப்பம் | Relatives Of Those Who Were Forcibly Disappeared

மேலும் நிச்சயமாக எனது இடுப்பில் பலம் இருக்கின்றது . முத்தமிழ் வித்தகர் பிறந்த மண்ணில் பிறந்தவன் நான். எல்லா தமிழ் பிரதேசங்களுக்கும் தமிழன் என்ற அடிப்படையில் நான் போராட்டங்களிலும் தமிழர்களுடைய நலன்கள் மற்றும் கடந்த கால கொரோனா காலகட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்திற்கு பிரதேச செயலாளர்கள் ஊடாக பொத்துவில் பிரதேச செயலாளர் ஊடாக ஆலையடி வேம்பு பிரதேச செயலாளரின் ஊடாக கல்முனை பிரதேச செயலாளர் ஊடாகவும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஊடாக பட்டினியில் வாழ்ந்த எமது உறவுகளுக்கு நிவாரண பணிகளை முன்னெடுத்து அந்த உதவியை எமது சகோதரர்கள் ஊடாக மேற்கொண்டு இருந்தேன் என குறிப்பிட்டார்.

இந்தப் போராட்டத்தின் போது செம்மணி மனிதப் புதைகுழி, உகந்த புத்த சிலை நிர்மாணம், தமிழர் காஷி அபகரிப்புகள், தொல்லியல் ஆக்கிரமிப்புகள், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, கொல்லப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாத தடை சட்டத்தை நிறுத்துதல் போன்றவற்றிற்கு நியாயம் கேட்கும் மக்கள் போராட்டமாக இந்த போராட்டம் அமைந்திருந்தது.

இந்தப்  போராட்டத்தில் பொதுமக்கள் சிவில் அமைப்புகள் கழகங்கள் இளைஞர்கள் என பல தரப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ்.கோப்பாயில் மது போதையில் முரண்பாடு: முச்சக்கர வண்டியை திருடிச் சென்ற சந்தேகநபர்கள்

யாழ்.கோப்பாயில் மது போதையில் முரண்பாடு: முச்சக்கர வண்டியை திருடிச் சென்ற சந்தேகநபர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US