வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆர்ப்பாட்டம் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குறித்த போராட்டமானது, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் (25.04.2025) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கருத்து தெரிவிக்கயில்,
“2984 ஆவது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் தமது உறவுகளை தேடி அலைகின்றேம்.
அரசாங்க செயற்பாடு
இதுவரையில் ஆட்சியில் இருந்த எந்த ஒரு அரசாங்கமும் தமக்கான தீர்வினை பெற்றுத்தரவில்லை.
சர்வதேசத்திடம் ஒரு முகமும் எம்மிடம் ஒரு முகமாக அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
தற்போதைய அரசாங்கம் கூட ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு உரிய தீர்வு பெற்று தரப்படும் என வாக்குறுதிகள் வழங்கினர்.
ஆனாலும் இதுவரையில் எந்த விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை” என தெரிவித்துள்ளனர்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
