காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி
தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வு வவுனியாவில் நேற்று (26.09.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தொடரும் போராட்டம்
இதன்போது, இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் கருத்து தெரிவிக்கையில்,
'‘காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டம் இன்றுடன் 2,410ஆவது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக, ஏ-9 வீதியில் உள்ள இந்த பந்தலில் எமது பயணம் தொடர்கிறது.
இதன்போது இந்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதைக் கண்டித்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திலீபன் அண்ணா மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் 36ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.
திலீபன் அண்ணா தனது உண்ணாவிரதத்தை செப்டம்பர் 15, 1987 அன்று 100,000 ஆதரவாளர்கள் முன்னிலையில் தொடங்கியிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் 11 நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 26, 1987 அன்று உயிர் நீத்தார்.
மேலும் 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், தமிழ் சமூகத்தின் மீதான சிங்கள ஆக்கிரமிப்பு நீண்டகாலப் பிரச்சினையாக இருந்து வந்துள்ளது.”என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
