இலங்கையுடனான பாதுகாப்பு உறவு மேலும் வலுப்பெறும்! - இந்தியா நம்பிக்கை
இலங்கையுடனான பாதுகாப்பு உறவு மேலும் வலுப்பெறும் என்று இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. இந்திய வான்படை தலைமையதிகாரி ஏர் சீஃப் மார்ஷல் ராகேஷ் குமார்சிங் பட்டாரியா இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பின் பாதை தொடர்ந்து உயரும் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை வான்படையின் 70வது ஆண்டு நிறைவு நிகழ்வுக்கு வந்திருந்த அவர், இலங்கையின் பாதுகாப்பு தளபதி, இராணுவத் தளபதி ஆகியோரை சந்தித்த பின்னர் இன்று அவர் ஊடகங்கள் மத்தியில் பேசினார்.
இலங்கையுடனான இந்தியாவின் உறவு தேசிய மட்டத்திலும், பாதுகாப்பு மட்டத்திலும் மிக நெருக்கமாக உள்ளது என்று இதன்போது அவர் குறிப்பிட்டார்.
நிகழ்வில் உரையாற்றிய இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான உறவு உள்ளதாக குறிப்பிட்டார்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
