கோவிட்டினால் மரணமாவோரின் அடக்கம் தொடர்பிலான முடிவு சுகாதார அமைச்சர் கையில்
கோவிட்டினால் மரணமாவோரின் அடக்கம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியே முடிவெடுப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தற்போது கொரோனா தொற்றுக்காக சிசிச்சை பெற்று வருவதாக முதன்மை சுகாதார நலன்துறை ராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிவித்தல் ஒன்றை விடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கோவிட்டினால் உயிரிழந்தோரின் உடலங்கள் தகனம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
எனினும் கால நிர்ணயம் எதனையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் கோவிட் உடலங்களின் அடக்கம் தொடர்பாக தடையுத்தரவு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியே அந்த வர்த்தமானி தடையை நீக்கும் உத்தரவை விடுக்க வேண்டும் என்று பெர்ணான்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு இந்த தடையை நீக்குவதற்கான அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே தற்போதும் தகன முறையே தொடர்வதாக சுதர்சினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 8 மணி நேரம் முன்

Siragadikka Aasai: தானாக வந்து வசமாக சிக்கிய ரோகினி... குடும்பத்தினர் க்ரிஷ் அம்மாவை அறிவார்களா? Manithan

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
