ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட முடிவு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மன்னார் பிரதேச சபைக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட முடிவை, உயர்நீதிமன்றம் இன்று இடைநிறுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தாக்கல் செய்த மனு நீதியரசர்கள் யசந்த கோதாகொட, முர்து பெர்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கை
முன்னர் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டபோதும், பின்னர் சட்டவிரோதமாக எந்தவொரு காரணமும் தெரிவிக்காமல், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியால் வழங்கப்பட்ட கடிதத்தின் மூலம், குறித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனவே, தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரால் எடுக்கப்பட்ட முடிவை செல்லுபடியாகாத வகையில் எழுத்தாணை பிறப்பிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நீதிமன்றத்தில் கோரியிருந்தது.
இதன்படி, பெப்ரவரி 21 ஆம் திகதி வரை, நடைமுறையில் இருக்கும் வகையில், இடைக்கால
உத்தரவின் மூலம் முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட முடிவை,
உயர்நீதிமன்றம் நிறுத்தியது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
