அமரபுர மகா சங்க சபையினால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனம்

Tamils Sri Lanka Sri Lankan political crisis
By Parthiban A Jan 02, 2024 08:53 PM GMT
Report

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை (GTF) மற்றும் அமரபுர நிக்காயவின் அனுநாயக்க தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்கள் குழு தொகுத்த "இமயமலைப் பிரகடனம்" என்ற ஆவணம் இலங்கை அமரபுர மகா சங்க சபையின் கருத்து அல்லவென அந்த சங்க சபையின் உதவிப் பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில், கடந்த வருடம் டிசம்பர் 8ஆம் திகதி, உலகத் தமிழர் பேரவை மற்றும் பௌத்த பிக்குகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்திருந்தார்.

இந்நிலையில், அந்த பேரவை, சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பைப் பிரதிநிதித்தவப்படுத்தி, அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட தேரர்கள் இணைந்து உருவாக்கிய, அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம உரிமையுடனும் அமைதியாக வாழக்கூடிய இலங்கையைப் பற்றிய “இமயமலைப் பிரகடனத்திற்கு” உற்சாக வரவேற்பு அளித்தார்.

பொட்டம்மானை கேட்ட இந்தியாவும், ஹமாஸைக் கேட்ட இஸ்ரேலும் (Video)

பொட்டம்மானை கேட்ட இந்தியாவும், ஹமாஸைக் கேட்ட இஸ்ரேலும் (Video)

இமயமலைப் பிரகடனம் 

மகாநாயக்க தேரர்கள் மற்றும் பொதுமக்களின் தகவலுக்காக எனக் குறிப்பிட்டு, டிசம்பர் 30, 2023 அன்று, இலங்கை அமரபுர மகா சங்க சபையின் உதவிப் பதிவாளர் அம்பலன்கொட சுமேதானந்த தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இமயமலைப் பிரகடனம் இலங்கை அமரபுர மகா சங்க சபையால் அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமரபுர மகா சங்க சபையினால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனம் | Rejected Himalaya Declaration

இமயமலைப் பிரகடனம் தொடர்பாக இலங்கை அமரபுர மகா சங்கத்தில் எந்த உடன்பாடோ அல்லது விவாதமோ இடம்பெறவில்லை.

அது ஒரு சில தேரர்களின் தனிப்பட்ட கருத்தின் வெளிப்பாடு மாத்திரமே என இதன் மூலம் வலியுறுத்தப்படுகிறது.

2008இல் குறைந்தது 40,000 மரணங்கள் மற்றும் 20,000 நிராயுதபாணிகள் காணாமல் ஆக்கப்பட்ட, யுத்தத்திற்கு தலைமை தாங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பு என்ற பெயரிலான அமைப்பின் தேரர்கள் மற்றும் உலகத் தமிழர் பேரவையை சந்தித்ததோடு, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களும் இமயமலை பிரகடனத்தை ஏற்றுக்கொண்டிருந்தன.

கடுமையான நிராகரிப்பு

இமயமலை பிரகடனம் என்ற ஆவணம் ஏற்கனவே இலங்கைத் தமிழர்களாலும் பல புலம்பெயர் தமிழ் குழுக்களாலும் கடுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

அமரபுர மகா சங்க சபையினால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனம் | Rejected Himalaya Declaration

கூட்டு இமயமலைப் பிரகடனத்தை கையளித்த விடயத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு, இணக்கமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இலங்கைக்கான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பை உருவாக்குவதில் ஒரு முக்கியமான முன்னேற்றம் எனக் குறிப்பிட்டிருந்தது.

எவ்வாறாயினும், உலகத் தமிழர் பேரவை மற்றும் பௌத்த பிக்குகளால் முன்வைக்கப்பட்ட கூட்டு இமயமலைப் பிரகடனம் குறித்து தமக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளதாக, அமைச்சின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி, உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ராஜகோபுர வடிவில் கட்டப்பட்ட திருச்சி விமான நிலையம்: புதிய முனையத்தில் தமிழரின் சிறப்புகள்

ராஜகோபுர வடிவில் கட்டப்பட்ட திருச்சி விமான நிலையம்: புதிய முனையத்தில் தமிழரின் சிறப்புகள்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல்

கூட்டுப் பிரகடனத்தை கையளிப்பதற்காக, சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பைப் பிரதிநிதித்தவப்படுத்தி, அமரபுர நிகாயவின் அம்பகஹபிட்டிய பிரிவின் அனுநாயக்க வண. மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நீதித்துறை சங்க நாயக்க வண. சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர் ஆகியோர் ஆகியோர் பங்கேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அமரபுர மகா சங்க சபையினால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனம் | Rejected Himalaya Declaration

மேலும், மேல் மாகாணத்தின் பிரதான சங்க நாயக மற்றும் ஸ்ரீ தர்மரக்ஷித பிரிவின் பதிவாளர் வண. கிதலகம ஹேமசார தேரர், வஜிரவங்ச பிரிவின் பதில் மகாநாயக்க பேராசிரியர் பல்லேகந்தே ரத்னசார தேரர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் மனித அபிவிருத்தி ஆய்வு மையத்தின் தலைவருமான வண, களுபஹன பியரதன தேரர், மத்திய மாகாணத்தின் பாததும்பர பிரதம சங்க நாயக வண. நாரம்பனாவே தம்மாலோக தேரர், ராமன்ய நிகாயவின் பிரதிப் பதிவாளர் வாந்துவே தம்மவங்ச தேரர்களும் கலந்தக்கொண்டதாக கூறப்படுகிறது.

யாழில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது (Photos)

யாழில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது (Photos)

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US