ஆட்பதிவுத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் சேவைகள் எதிர்வரும் ஏப்ரல் 06ஆம் திகதி முதல் வழக்கம் போல் நடைபெறும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் கணினி அமைப்பு ஏற்பட்ட கோளாறுகள் சீர் செய்யப்பட்டவுடன் அனைத்து சேவைகளும் தொடர்ந்து செயல்படும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன் கணினி அமைப்பைச் சீர் செய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு நாள் சேவை
23, 24 மற்றும் 26 ஆகிய திகதிகளில் பத்தரமுல்லவில் உள்ள ஆட் பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களுக்கு ஒரு நாள் சேவைக்காக நேரில் சென்று தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாதவர்களுக்கு மட்டும், நேற்று ஒரு நாள் சேவையின் மூலம் தேசிய அடையாள அட்டைகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தேசிய அடையாள அட்டைத் தகவல்களைச் சரிபார்த்தல் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல் உள்ளிட்ட ஏனைய அனைத்து சேவைகளும் மட்டுப்படுத்தலுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதால், இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மாற்று முறைகளைக் கையாள வேண்டும் என திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.