இந்திய வம்சாவளியினராக பதிவிடலாம்: பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் மீண்டும் மாற்றம்
பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில் இனத்தினை இந்திய வம்சாவளியினர் என்பதை நீக்கி பதிவாளர் நாயகத்தால் வெளியிட்ட சுற்றுநிரூபத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
பதிவாளர் நாயகத்தின் சுற்றுநிரூபத்த்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஒப்புதல் கடிதம்
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தனர்.

மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொடர் அழுத்தத்தினால் மீண்டும் இந்திய வம்சாவளியினர் என்று பதிவிடலாம் என்ற ஒப்புதல் கடிதத்தை செந்தில் தொண்டமானுக்கு எழுத்து மூலம் பதிவாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri