வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள தடுப்பூசிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
சீனா மற்றும் ரஸ்யாவின் கோவிட் -19 தடுப்பூசிகள் தொடர்பில் மேலதிக தகவல்களை எதிர்பார்ப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.
இந்த தடுப்பூசிகளை இலங்கையில் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை வழங்கும் முன்னர் இந்த தகவல்கள் எதிர்பார்க்கப்படுவதாக இலங்கையின் தொற்று நோயியல் மருத்துவமனையின் சிரேஸ்ட ஆலோசகர் வைத்திய கலாநிதி ஆனந்த விஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
சீனாவின் சினோபாம் தடுப்பூசி தொடர்பில் கடந்த வாரம் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனினும் சினோபாம் மற்றும் ரஸ்யாவின் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகளின் மேலதிக விபரங்களை தாம் எதிர்பார்ப்பதாக ஆனந்த விஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் அவற்றை இலங்கையில் பயன்படுத்துவதற்கான ஒப்புதல் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் 3இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படவிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.



