உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் - காவல்துறை ஆய்வாளருக்கு சட்டமா அதிபர் பிறப்பித்துள்ள உத்தரவு
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் வெளிப்படுத்தப்பட்ட ஐந்து சந்தேகத்துக்குரியவர்களை விசாரணை செய்யுமாறு சட்டமா அதிபர் காவல்துறை ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி ஆணைக்குழுவின் அறிக்கையின்; 17 வது அத்தியாயத்தில் பெயரிடப்பட்ட அபு ஹிந்த், லுக்மான் தாலிப், லுக்மான் தாலிப் அகமது அல்லது அபு அப்துல்லா, ரிம்ஜான் மற்றும் மகேந்திரன் புலஸ்தினி அல்லது சாரா ஜஸ்மின் ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த விசாரணைகளுக்காக சட்டமா அதிபரின் திணைக்களத்தின் 12 சட்ட அதிகாரிகளின் சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி; நிஷாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர், கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து கலந்துரையாடியபோதே இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.