அமெரிக்கப் போர் விமானங்களுக்கு அனுமதி மறுப்பு: இத்தாலியின் அதிரடி முடிவால் பரபரப்பு
மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் வழியில், சிசிலித் தீவில் உள்ள 'சிகோனெல்லா' இராணுவ விமான தளத்தில் தரையிறங்க அமெரிக்கப் போர் விமானங்களுக்கு இத்தாலி அரசு அனுமதி மறுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தாலியின் பிரபல நாளிதழான 'கொரியர் டெல்லா செரா' வெளியிட்டுள்ள செய்தியின்படி, அமெரிக்காவின் சில குண்டுவீச்சு விமானங்கள் (Bombers) இந்தத் தளத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்தன.
ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தப்படி முறையான அனுமதி கோரப்படாததாலும், இத்தாலிய இராணுவத் தலைமையுடன் ஆலோசிக்கப்படாததாலும் இந்த அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிரடி நடவடிக்கை
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இத்தாலி இந்த மோதலில் நேரடியாக இழுக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் வலதுசாரி அரசாங்கம், அமெரிக்காவிடமிருந்து இத்தகைய கோரிக்கைகள் ஏதேனும் வந்தால், அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து அனுமதி பெற்ற பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சிகோனெல்லா தளம் மத்திய தரைக்கடல் பகுதியில் அமெரிக்காவின் மிக முக்கியமான இராணுவத் தளங்களில் ஒன்றாகக் கருதப்படும் நிலையில், இத்தாலியின் இந்த "நோ" (No) சொல்லும் அதிரடி நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து இத்தாலிய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri