சொந்த மண்ணிலேயே அகதிகளான அவலம்! போர் முனையில் தவிக்கும் 34,000 கம்போடியர்கள்
கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு இடையே நிலவி வரும் எல்லைப் போர் காரணமாக, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
தற்காலிகப் போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதிலும், எல்லையில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக மக்கள் தங்களின் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலை நீடிக்கிறது.
கம்போடிய உள்விவகார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்த மாதம் வரை சுமார் 34,440 பேர் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் தங்கி வருகின்றனர். இதில் 11,355 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் இருமுறை வெடித்த இந்த மோதலில், இரு தரப்பிலும் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
பொருளாதார நிலை
மேலும், தாய்லாந்து நடத்திய வான்வழித் தாக்குதல்கள் காரணமாகப் பல கிராமங்கள் உருக்குலைந்துள்ளன. முகாம்களில் உள்ள சிறுவர்களிடையே பாடசாலையை விட்டு விலகும் விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது. இடம்பெயர்ந்த பல குழந்தைகள் பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டு வேலைகளில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், அமெரிக்க - ஈரான் போர் காரணமாக உயர்ந்துள்ள பெற்றோல் விலை, மாணவர்கள் தொலைதூரத்தில் உள்ள பாடசாலைகளுக்குச் செல்வதைச் சவாலானதாக மாற்றியுள்ளது.
"போர் மீண்டும் தொடங்கும்" என்ற வதந்திகளால் சிறுவர்கள் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லையில் உள்ள பல கிராமங்களைத் தாய்லாந்து இராணுவம் முள்வேலிகள் மற்றும் பெரிய கொள்கலன்கள் மூலம் மறித்து ஆக்கிரமித்துள்ளது.
மறுபுறம், கம்போடிய இராணுவம் பாதுகாப்பு காரணங்களுக்காக மக்கள் தங்களின் விளைநிலங்களுக்குச் செல்வதைத் தடுத்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களைச் சேகரிக்க முடியாமல் வருமானத்தை இழந்துள்ளனர்.
தொடர்ச்சியான போர்களால் நிறைந்துள்ளது. 1960-களில் வியட்நாம் போர் பாதிப்பு, கெமெர் ரூஜ் ஆட்சி, மற்றும் சிவில் போர் எனப் பல மோதல்களைக் கண்ட கம்போடிய மக்கள், தற்போது மீண்டும் ஒரு எல்லைப் போரினால் தங்களின் நிம்மதியான வாழ்க்கையைத் தொலைத்து நிற்கின்றனர்.
"அமைதிக்கு நன்றி" என்ற வாசகங்கள் எங்கும் நிறைந்திருந்தாலும், எல்லையில் இன்னும் துப்பாக்கிச் சத்தங்கள் அவ்வப்போது கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என உள்ளூர் மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri