பல வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து வரும் மக்கள்! ஜாட்சன் பிகிறாடோ (Photos)

Sri Lanka Refugees Jaffna Sri Lanka
By Theepan Jan 23, 2023 08:16 AM GMT
Report

யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாமில் சுமார் 32 வருடங்களுக்கு மேலாக மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களை தமது சொந்த காணிகளில் மீள் குடியேற்றுவதற்கு அரசிடம் வலியுறுத்தியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை என மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவித்தார்.

முகாமிலுள்ள சுமார் 100 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் நேற்றைய தினம் (22. 01.2023) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து வரும் மக்கள்! ஜாட்சன் பிகிறாடோ (Photos) | Refugees At Interim Camp Jaffna

அகதிகளாக வாழ்ந்து வரும் மக்கள்

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காண நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காண நிறுவனத்தின் பணியாளர்கள் இணைந்து குறித்த உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.

இதன்போது உரையாற்றி ஜாட்சன் பிகிறாடோ,

யாழ்ப்பாணம் வலி வடக்கு பொலிகண்டி பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் கடந்த 32 வருடங்களுக்கு மேலாக பல்வேறு இடர்களுக்கு மத்தியில் வலி வடக்கு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

சுமார் 32 வருடங்களுக்கு மேலாக 6 நலன்புரி நிலையங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். சொந்த நிலம் இருந்தும் அகதி வாழ்வை வாழ்ந்து வருகின்றீர்கள்.

மழைக்காலங்களில் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் முகாம்களில் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருவதை நாங்கள் நேரடியாக அவதானித்துள்ளோம்.

பல வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து வரும் மக்கள்! ஜாட்சன் பிகிறாடோ (Photos) | Refugees At Interim Camp Jaffna

நிவாரண உதவி

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஓர் உதவியாகவே நாங்கள் தொடர்ந்து நிவாரண உதவியை முன்னெடுத்து வருகிறோம். 1990 ஆம் ஆண்டிலிருந்து இந்த முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள்.

உங்கள் நிலங்களை விடுவிக்கக் கோரி தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றீர்கள்.

மக்களினுடைய காணிகளை ஏன் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்த வேண்டும்? 1990 ஆம் ஆண்டு மக்கள் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த பின் இன்று வரை அந்த மக்களின் தனியார் காணிகள் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

இந்த உயர் பாதுகாப்பு யாருக்கு? மக்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டிய அரசு மக்களின் காணிகளை பிடித்து அதில் முகாம் அமைத்து அதற்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

பல வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து வரும் மக்கள்! ஜாட்சன் பிகிறாடோ (Photos) | Refugees At Interim Camp Jaffna

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு 

இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு இன்று மக்களை முகாம்களில் தவிக்க விட்டுள்ளது.

எனவே, முகாம்களில் உள்ள மக்களை மீண்டும் அரசு அவர்களின் சொந்த நிலங்களில் மீளக் குடியம ர்த்தி அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US