பொத்துவிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு
பொத்துவில்- கோமாரி களுகொள்ள பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பேருந்து தரிப்பு நிலையம் என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வை இன்று(28) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
நிதி பங்களிப்பு
கோமாரி மக்கள் தமது குடிநீர் வசதிகளை செய்து தருமாறு இந்திய அரசிடம் கோரியதற்கு அமைய நீண்டகாலமாக குடிநீர் இன்றி பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் களுகொள்ள பிரதேசத்தில் சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டத்தின் கீழ் பல இலட்சம் ரூபா பெறுமதியான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றையும் அந்த பகுதியில் பஸ் தரிப்பு நிலையம் ஒன்றையும் இந்திய மக்களின் நிதி பங்களிப்புடன் புனர் நிர்மானித்தனர்.

இதனை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று வைக்கம் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு நாடா வெட்டி திறந்து வைத்ததுடன் பெயர் பலகைகளை திரை நீக்கம் செய்து திறந்து வைத்தனர்.
ஆதாரம் இல்லை எகிறி பேசிய குணசேகரன், ஒரு விஷயம் கூறி ஆப் செய்த ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்த வாரம் நீங்கள் OTT-யில் தவறவிடாமல் பார்க்கவேண்டிய படங்கள் லிஸ்ட்.. 800 கோடி வசூல் செய்த படமும் உள்ளது Cineulagam