இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைக்க ஆதரவு : பிரித்தானிய லிபரல் கட்சி
இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்படுவதற்கு தனது கட்சியின் ஆதரவை லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவரான சேர் எட் டேவி(Sir Ed Davey)..மீண்டும் உறுதிப்படுத்தினார்
இதன் மூலமே இனப்படுகொலைகளுக்கு பொறுப்புக்கூற முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட காணொளிக் காட்சியில், இலங்கை அரசாங்கம் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
சரியானதைச் செய்யத் தவறிய ரணில்
தொடர்ந்தும் அரசாங்கம் தமிழ் மக்களை ஒடுக்குகிறது. ரணில் விக்ரமசிங்க இன்னும் சரியானதைச் செய்யத் தவறிவிட்டார் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
இதன் காரணமாகவே, இலங்கை அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று கோரும் குரல்களுக்கு தமது கட்சியின் ஆதரவை தாம் வெளியிட்டுள்ளதாக டேவி தெரிவித்துள்ளார்.
போர் முடிவடைந்து தொடர்ந்து 15 வருடங்கள் ஆகிறது. நாங்கள் நீண்ட நேரம் காத்திருந்தோம் என்றும் சேர் எட் டேவி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
